போகன்வில்லா படத்திற்கு இசையமைத்திருந்த இசையமைப்பாளர் சுசின் ஷியாமுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தனக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது கிடைத்துள்ளது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள சுசின் ஷியாம், எனக்கு சிறந்த இசையமைப்பாளராக மஞ்சும்மேல் பாய்ஸ் படத்திற்கு தான் விருது கிடைக்கும் என்று நான் ரொம்பவே எதிர்பார்த்தேன். அந்த படத்திற்காக எனக்கு இந்த விருந்து கிடைத்திருந்தால் இன்னும் அதிகம் சந்தோஷம் அடைந்திருப்பேன். அப்படி அந்தப் படத்திற்காக விருது கிடைக்காததில் கொஞ்சம் வருத்தமே என்று கூறியுள்ளார்.


