சமீபத்தில் வெளியான அரண்மனை 4 தற்போது தியேட்டர்களில் கலக்கிக் கொண்டிருக்கிறது. அனைத்து பகுதிகளிலும் சில நாட்கள் படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிந்தது. படம் ரிலீஸ் ஆகி ஒரு வாரம் ஆகியும் கூட வார இறுதி நாட்களில் டிக்கெட் கிடைக்கவில்லை.
இச்சமயத்தில் சுந்தர் சி அரண்மனை போல் தனது மற்றொரு ட்ரேட் மார்க் படமான கலகலப்பு படத்தின் அடுத்த பாகத்தையும் எடுக்க திட்டமிட்டுள்ளார். இந்த மாத இறுதியில் கலகலப்பு படத்தின் மூன்றாம் பாகத்தை ஆரம்பிக்கப் போகிறார். அதற்கான முன் வேலைகளை ஏற்கனவே முடித்துவிட்டார் என தெரிகிறது.
முதல் பாகம் போல் கலகலப்பு இரண்டாம் பாகம் பெரிதாக ஜோலிக்கவில்லை. முதல் பாகத்தில் நடிகர் சந்தானம் இருந்ததால் காமெடி காட்சிகள் தூள் பறந்தன. இப்பொழுது மூன்றாம் பாகத்தில் சிவா மற்றும் விமல் ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இப்படத்தில் சந்தானம் இல்லாத குறையை வேறு ஒரு நடிகரை வைத்து தீர்க்க சுந்தர் சி.அரண்மனை நான்காம் பாகத்தில் காமெடியில் கலக்கிய நகைச்சுவை பிரபலமான விடிவி கணேசை வைத்து தான் கலகலப்பு 3 காமெடியை திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபகாலமாக கணேஷின் காமெடி வொர்க் அவுட் ஆகிறது என்பதால் சுந்தர் சி இந்த முடிவை எடுத்துள்ளார் என கருதப்படுகிறது.