குண்டூர் காரம், தமகா போன்ற படங்களில் கவர்ச்சிகரமான வேடங்களில், மற்றும் “புஷ்பா 2” இல் சிறப்புப் பாடலில் நடனமாடி நடித்த ஸ்ரீலீலா, தற்போது பாலிவுட்டில் அறிமுகமாகிறார். அதாவது கார்த்திக் ஆர்யனுக்கு ஜோடியாக ஒரு காதல் படத்தில் பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார்.

தற்போது ஆக்சன் வகை கதைகளில் கவனம் செலுத்தியுள்ளார். அவர் அறிமுகமாகும் பாலிவுட் படத்தில் “ஏஜென்ட் மிர்ச்சி” என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. இதில் ஸ்ரீலீலா புதிய தோற்றத்தில் காணப்படுகிறார்.
வரவிருக்கும் 19-ஆம் தேதி இப்படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகவுள்ளது. தனது துணிச்சலான புதிய அவதாரத்தின் மூலம், ஸ்ரீலீலா ஆக்சனிலும் தனது திறமையை நிரூபிக்க தயராகி வருகிறார். தற்போது தமிழில் சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ரீ லீலா நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது