Touring Talkies
100% Cinema

Tuesday, October 14, 2025

Touring Talkies

டீப் பேக் வீடியோக்களுக்கு அதிக வியூஸ், லைக்குகள் கிடைப்பது எந்த மாதிரியான மனநிலை என புரியவில்லை நடிகை அன்னா ரேஷ்மா ராஜன் OPEN TALK!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2017ல் மலையாளத்தில் வெளியான ‘அங்கமாலி டைரீஸ்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் அன்னா ரேஷ்மா ராஜன். அதைத்தொடர்ந்து அதே ஆண்டில் மோகன்லால் நடித்த ‘வெளிப்பாடிண்டே புஸ்தகம்’ படத்திலும் ஹீரோயினாக நடித்தார். குறிப்பாக அந்த படத்தில் இடம்பெற்ற ‘ஜிமிக்கி கம்மல்’ பாடல் மிகப் பிரபலமானது. அந்த பாடல் மூலம் அன்னா ரேஷ்மா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். ஆனால் தற்போது அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. அதற்குக் காரணமாக அவருடைய உடல் எடை அதிகரிப்பு சொல்லப்படுகிறது. இதன் காரணமாக அவர் பலமுறை சோசியல் மீடியாவில் ட்ரோல் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையிலே சமீபத்தில் அன்னா ரேஷ்மாவை போல உருவாக்கப்பட்ட சில டீப் பேக் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வெளியானது. அந்த வீடியோக்கள் வைரலாக பரவியதும், அவர் அதற்கான வருத்தத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தினார். தனது சோசியல் மீடியா பக்கத்தில் அந்த வீடியோக்கள் டீப் பேக் என்று விளக்கி, உண்மையான தனது புகைப்படத்தையும் சேர்த்து, “தயவு செய்து என்னுடைய டீப் பேக் வீடியோக்களையும் புகைப்படங்களையும் யாரும் பகிர வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டார்.

மேலும், தனது உண்மையான புகைப்படங்களும் வீடியோக்களும் விட டீப் பேக் வீடியோக்களுக்கு அதிக வியூஸ், லைக்குகள் கிடைப்பது மனநிலையைக் கேள்விக்குள்ளாக்குகிறது என்று கூறி தனது வருத்தத்தையும் வெளிப்படுத்தினார்.

- Advertisement -

Read more

Local News