தமிழ் சினிமாவில் ‘கோமாளி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், பின்னர் நடிகராகவும் தன்னை நிலைநாட்டிக் கொண்டார். சமீபத்தில் அவர் நடித்த ‘டிராகன்’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கிய ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்திலும் நடித்துள்ளார்.

இப்படம் வரும் டிசம்பர் 18ஆம் தேதி வெளியாக உள்ளது. மேலும் கீர்த்திஸ்வரன் இயக்கிய ‘டியூட்’ படத்திலும் பிரதீப் நடித்துள்ளார். மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரித்த இந்த படத்தில் மமிதா பைஜு நாயகியாகவும், சரத் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சாய் அபயங்கர் இசையமைத்த இந்த காமெடி கலந்த திரைப்படம் வரும் 17ஆம் தேதி வெளியாக உள்ளது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
அதில் நடிகை மமிதா பைஜுவைத் தவிர, படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். விழாவில் தயாரிப்பாளர் ரவி சங்கர் கூறியதாவது: “நான் இப்படத்தை பார்த்தேன், இது அசாதாரணமாக இருந்தது. இப்படம் நிச்சயமாக சூப்பர் டூப்பர் ஹிட்டாகும் என்று நம்புகிறேன். டிரெய்லருக்குப் புறம்பாக பல திருப்பங்கள் உள்ளன; ரசிகர்கள் அதை நிச்சயமாக ரசிப்பார்கள். தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், ரசிகர்கள் என அனைவரும் இப்படத்தால் மகிழ்ச்சி அடைவார்கள்” என்று தெரிவித்தார்.