தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மகேஷ்பாபு ஏற்கெனவே ஐதராபாத்தில், கச்சிபவுலி என்ற இடத்தில் ‛ஏஎம்பி சினிமாஸ்’ என்ற மல்டிபிளக்ஸ் தியேட்டரை சில வருடங்களுக்கு முன்பு திறந்தார். அடுத்ததாக ஐதராபாத் நகரில் ஆர்டிசி எக்ஸ் ரோடில் எஎம்பி கிளாசிக் என்ற மல்டிபிளக்ஸ் தியேட்டரைத் திறக்க உள்ளார். மொத்தம் 7 தியேட்டர்கள் அடங்கிய அந்த மல்டிபிளக்ஸ் அடுத்த ஆண்டு பொங்கலுக்குத் திறக்கப்படும் எனத் தெரிகிறது.
