உலகிலேயே முதல்முறையாக வில்வித்தைக்கான லீக் போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது. இந்திய வில்வித்தை சங்கம் ஆர்ச்சரி பிரீமியர் லீக் (APL) என்ற பெயரில் இந்தப் போட்டிகளை நடத்துகிறது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்கின்றன. இதில் 36 இந்திய வீரர்களும், 12 வெளிநாட்டு வீரர்களும் கலந்துகொள்கிறார்கள். ஒவ்வொரு அணியிலும் 8 பேர் (4 ஆண்கள், 4 பெண்கள்) என மொத்தம் 48 பேர் விளையாடுகிறார்கள். அக்டோபர் 2 முதல் 12ம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன. தூர்தர்ஷன் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டாரில் நேரலையாக ஒளிபரப்பப்படும்.

விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ள நடிகர் ராம் சரண், “என்னை APL தொடரின் தூதராக நியமித்தமைக்கு மகிழ்ச்சி அடைகிறேன். நமது நாட்டின் தொன்மையான வலிமையான விளையாட்டுக்காக உலகிலேயே முதல்முறையாக லீக் நடத்தப்படுவது பெருமையாக உள்ளது.
வில்வித்தை என்பது கவனம், துல்லியம், வலிமையை பிரதிபலிக்கிறது. இதன் மதிப்புகள் விளையாட்டு மைதானத்திலும், வாழ்க்கையிலும் பொருந்துகின்றன. இந்தத் தொடர் உலகம் முழுவதும் உள்ள வீரர்களுக்கு உத்வேகம் தரும். வில்லை எடுத்து, நோக்கத்துடன் எய்துங்கள், சிறப்பை அடையுங்கள்” என்றார்.