ஈரமான ரோஜாவே படத்தின் “வா வா அன்பே பூஜை உண்டு… பாடலில் நடித்த மோகினி ரசிகர்களிஞம் கவனம் பெற்றவர். தொடர்ந்து பல படங்களில் நடித்த மோகினி, பரத் என்பவரை திருமணம் செய்து அமெரிக்காவில் குடியேறினார்.

சமீபத்திய பேட்டியில் பேசிய அவர், “கண்மணி படத்தில் நெருக்கமான காட்சிகளில் நடிக்க வலியுறுத்தினார்கள். நீச்சல் உடை காட்சிக்கு சம்மதிக்காமல் அழுதுவிட்டேன். எனக்கு நீச்சல் தெரியாது என்று விளக்கினேன். ஆனால், அந்த கவர்ச்சி பாடலுக்காக அந்தக் காட்சியை கட்டாயப்படுத்தினர். பின்னர் அவர்களின் அழுத்தத்தால் நடித்தேன்.
ஆனால் ஊட்டியில் அதே காட்சியை மீண்டும் படமாக்கச் சொன்னபோது மறுத்துவிட்டேன். படப்பிடிப்பு தொடராது என்றபோதும் அது உங்கள் பிரச்சினை, என்னுடையது அல்ல எனக் கூறினேன். எனது விருப்பமின்றி கவர்ச்சியாக நடித்த ஒரே படம் கண்மணி தான் என்றார்.