பிரபல இயக்குனர் எஸ். எஸ். ராஜமவுலி தற்போது மகேஷ் பாபு நடிக்கும் SSMB29 படத்தை இயக்கி வருகிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில், பாலிவுட் வெப் தொடரான The Badges of Bollywood டிரெய்லரில் எஸ். எஸ். ராஜமவுலியின் தோற்றம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் இந்தத் தொடரின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
பாபி தியோல், லக்சயா, சாஹர் பம்பா, ராகவ் ஜுயால், மோனா சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த தொடர் வரும் 18ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக உள்ளது.