Touring Talkies
100% Cinema

Thursday, August 21, 2025

Touring Talkies

நடிகர் சூர்யாவுக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை – நடிகர் சூர்யா நற்பணி இயக்கம் விளக்கம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் சூர்யா அரசியலுக்கு வரப்போவதாக வெளியான தகவலுக்கு இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கம் விளக்கம் கொடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில், கடந்த சில நாட்களாக சூர்யா பற்றி சில பொய்யான தகவல்கள் இணைய ஊடகங்களில் பரவி வருகின்றன. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் சூர்யா களமிறங்கப் போகிறார் என்று சமூக வலைதளங்களை மையமாக வைத்து இந்த பொய்யான செய்தி பரப்பப்பட்டு வருகிறது.இந்தச் செய்தி உண்மைக்கு மாறான போலியான தகவல் என்பது மட்டுமல்ல, சூர்யாவின் கோட்பாடுகளுக்கு முரணானது. கலை உலகப் பயணமும் அகரமும் இப்போதைய அவர் வாழ்வுக்கு போதுமான நிறைவைத் தந்துள்ளது.சூர்யா பற்றி வெளியான போலியான இந்த செய்தியைத் திட்டவட்டமாக மறுக்கிறோம், நன்றி’ என விரிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Read more

Local News