தென்னிந்திய சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகை ராஷ்மிகா, ஹிந்தி திரையுலகிலும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இவர் கர்நாடக மாநிலத்தின் கூர்க் பகுதியில் வசிக்கும் கொடவா சமூகத்தை சேர்ந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்திய ஒரு பேட்டியில், “இந்த சமூகத்திலிருந்து திரையுலகிற்கு வந்த முதல் நடிகை நான்தான்” என்று கூறினார். அவரது இந்த கருத்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, கொடவா சமூகத்தில் இதற்கு முன்னரே பலர் சினிமாவுக்கு வந்து நடித்துள்ளனர். குறிப்பாக, 90களின் இறுதியில் தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகை பிரேமா இந்த சமூகத்தை சேர்ந்தவர் என்பதைக் குறிப்பிட்டு ரசிகர்கள், ராஷ்மிகாவின் கருத்தை விமர்சிக்கின்றனர்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் நடிகை பிரேமா கூறியதாவது, “நானும் கொடவா சமூகத்தின் முதல் நடிகை அல்ல. என்னை விட முன்னர் பலர் திரையுலகில் இருந்தனர். குறிப்பாக நடிகை சசிகலா எனக்கு முன்பே சினிமாவில் இருந்தார். அதன் பின் தான் நானும் திரையுலகிற்குள் வந்தேன். இன்றும் திரையுலகின் பல்வேறு துறைகளில் கொடவா சமூகத்தை சேர்ந்தோர் பணியாற்றி வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.