ஆத்யக் புரடக்சன்ஸ் சார்பில் கவுதம் சொக்கலிங்கம் தயாரிப்பில் உருவாகும் “கெவி” படத்தை தமிழ் தயாளன் இயக்கியுள்ளார். இதில் அறிமுகமான ஆதவன் கதாநாயகனாக நடிக்க, ஷீலா ராஜ்குமார், ஜாக்குலின் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள்.படத்தின் பிரதான படப்பிடிப்பு கொடைக்கானல் பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது.
இப்படத்திற்காக இயக்குநர் தமிழ் தயாளன், மூன்று ஆண்டுகளாக மலைக்கிராம மக்களோடு வாழ்ந்து, அவர்களது வாழ்வியலையும் பண்பாடுகளையும் தெரிந்துக்கொண்டு இக் கதையைப் உருவாக்கியதாக கூறப்படுகிறது. மலைவாழ் மக்களின் அன்றாட வாழ்க்கையை முன்வைக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது.
படத்தின் ட்ரெய்லரில், இரவு நேரத்தில் ஷீலா ராஜ்குமாருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட கிராமமக்கள் அவரை தோளில் தூக்கிச் செல்லும் காட்சிகள் காட்டப்படுகின்றன. எதிரே கதாநாயகனை சிலர் தாக்கும் காட்சிகளும் ஒருபக்கம் அதே சமயம் குழந்தை பிறப்பதும் அமைந்திருக்கிறது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி தற்போது வரவேற்பை பெற்றுள்ளது.