2004-ஆம் ஆண்டு ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் நடித்த நிலையில் இயக்குநர் செல்வராகவன் இயக்கிய ‘7ஜி ரெயின்போ காலனி’ திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது. அந்தப் படத்தில் இடம்பெற்ற ‘கண்பேசும் வார்த்தைகள்’, ‘கனா காணும் காலங்கள்’ போன்ற பாடல்கள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றன. தற்போது 19 ஆண்டுகள் கடந்த பிறகு, ‘7ஜி ரெயின்போ காலனி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய செல்வராகவனே இதையும் இயக்குகிறார். மேலும், முதலாவது பாகத்தில் கதாநாயகனாக நடித்த ரவி கிருஷ்ணா இந்த இரண்டாம் பாகத்திலும் கதாநாயகனாக நடித்துவருகிறார்.

புத்தாண்டை முன்னிட்டு இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. ‘7ஜி ரெயின்போ காலனி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருவதாகத் தெரிய வந்ததால் ரசிகர்களிடையே மகிழ்ச்சி காணப்பட்டது. இதில் அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படம் ஸ்ரீ சூர்யா மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா பணியாற்றுகிறார். ஒளிப்பதிவை ராம்ஜி மேற்கொள்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே எந்த சப்தமுமின்றி தொடங்கி வேகமாக முன்னேறி வருகிறது. இதற்கிடையில் ஜனவரி மாதத்தில் வெளியான முதல் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
‘7ஜி ரெயின்போ காலனி 2’ படத்தின் படப்பிடிப்பு தற்போது 50 சதவீதம் முடிந்துவிட்டதாக இயக்குநர் செல்வராகவன் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.இந்த சூழலில், இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசையில், பாடகி ஸ்ரீநிதி ஸ்ரீபிரகாஷ் ஒரு பாடலைப் பாடியுள்ளதாக இயக்குநர் செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.