2004ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில், ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் நடிப்பில் வெளியான படம் 7ஜி ரெயின்போ காலனி. தெலுங்கில், இந்த படம் 7ஜி பிருந்தாவன் காலனி என்ற பெயரில் வெளியானது. யுவன் சங்கர் ராஜாவின் இசையமைப்பில், ஏ.எம். ரத்னம் தயாரித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்நிலையில், தற்போது 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தை மீண்டும் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இயக்க உள்ளார் செல்வராகவன். இதில், ரவி கிருஷ்ணாவே மீண்டும் நாயகனாக நடிக்கிறார், அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அனஸ்வர ராஜன் நடிக்கிறார். இசையமைப்பில் மீண்டும் யுவன் சங்கர் ராஜா சேர்ந்து வேலை செய்கிறார்.

40 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில், படம் பாதியிலேயே நின்றுவிட்டதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு, இன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் செல்வராகவன். அதேபோல், தெலுங்கு பதிப்பான 7ஜி பிருந்தாவன் காலனி-2 போஸ்டரும் வெளியாகியுள்ளது.