மலையாளத்தில் ‘கோதா’, ‘மின்னல் முரளி’ போன்ற திரைப்படங்களை இயக்கிய பசில் ஜோசப், தற்போது பல திரைப்படங்களில் நடிகராகவும் பிஸியாக இருக்கிறார். ‘ஜெய் ஜெய் ஜெய் ஜெய் ஹே’, ‘குருவாயூர் அம்பல நடையில்’ போன்ற படங்களில் இவருடைய நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இந்நிலையில், அவர் அடுத்ததாக இயக்கும் புதிய திரைப்படத்தில் மோகன்லாலும் மம்முட்டியும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் வெளியான ‘சூக்ஷ்மதர்ஷினி’ மற்றும் ‘பொன்மேன்’ ஆகிய திரைப்படங்கள் மாபெரும் வெற்றிபெற்றன. மேலும், பசில் ஜோசப்பின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மரணமாஸ்’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், பசில் ஜோசப், தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜுனுடன் ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளதாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படம் சூப்பர் ஹீரோ கதையில் உருவாகவிருக்கிறது எனவும் கூறப்படுகிறது. தற்போது அல்லு அர்ஜுன், இயக்குநர் அட்லீ இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.