காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலாக இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற நடவடிக்கையின் கீழ், பாகிஸ்தானும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் இயங்கிவந்த 9 பயங்கரவாத முகாம்களை முற்றிலும் அழித்ததாக அறிவித்தது.

இதன் பின், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதன் தொடர்ச்சியாக கடந்த மூன்று நாட்களாக ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பாகிஸ்தான் தனது ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இந்த தாக்குதல்களுக்கு இந்திய பாதுகாப்புப் படையினர் தக்க முறையில் பதிலடி வருகின்றனர்.
இந்த தாக்குதல்களுக்கிடையில் நடிகை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்டோரி பதிவிட்டுள்ளார். இதில், பாலஸ்தீன எழுத்தாளர் மற்றும் கவிஞரான மஹ்மூத் தர்விஷின் ஒரு கவிதையை பகிர்ந்துள்ளார். “போர் முடிவடையும். தலைவர்கள் ஒருவரையொருவர் கைகுலுக்கிக் கொள்வார்கள். தாய்மார்கள் தங்களது தியாக மகன்களை எதிர்பார்க்கின்றனர். பெண்கள் தங்கள் அன்பான கணவர்களை நினைவில் வைத்துக் காத்திருப்பார்கள். குழந்தைகள் தங்களது ஹீரோ தந்தைகளை காத்திருப்பார்கள். நமது தாயகத்தை விற்றவர்கள் யார் என்பது எனக்குத் தெரியாது, ஆனால் அந்த விலையைச் செலுத்தியவர்களை நான் கண்டுள்ளேன்” என்ற இந்த கவிதை, சியோனிசர்களால் தங்கள் தாயகத்தை இழந்த பாலஸ்தீனியர்களின் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது.