இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி நேற்று அதாவது மே 1ஆம் தேதி வெளியான படம் ரெட்ரோ. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சூர்யா இந்த படத்தை தயாரித்துள்ளார். படம் வெளியாகி ஓடிக்கொண்டு உள்ள நிலையில் படத்தில் நடித்துள்ள நடிகை பூஜா ஹெக்டே பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் இணைந்து, ரெட்ரோ படத்தை லண்டனில் பார்த்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
