Tuesday, December 31, 2024

7ஜி ரெயின்போ காலனி 2ம் பாகம் உருவாகுமா? வெளியாக வாய்ப்பு உண்டா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2004ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் நடித்த ‘7ஜி ரெயின்போ காலனி’ என்ற படம் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது. இன்றும் இளம் தலைமுறையினரால் பாராட்டப்படும் படமாக உள்ளது.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘7ஜி ரெயின்போ காலனி’ படத்தின் இரண்டாம் பாகத்தை சில மாதங்களுக்கு முன்பு தொடங்கினர். இந்த பாகத்தையும் செல்வராகவன் இயக்க, ரவி கிருஷ்ணா கதாநாயகனாக நடித்து வந்தார்.

படத்தின் 40% படப்பிடிப்பு முடிந்த நிலையில், செல்வராகவனுக்கும் ரவி கிருஷ்ணாவுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், இப்படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் பரவின. இவர்கள் இடையே சமரசம் ஏற்பட்டு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கினாலும் அதில் ஆச்சரியமில்லை.இந்நிலையில், செல்வராகவன் தற்போது ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் ‘மென்டல் மனதில்’ படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News