Tuesday, November 19, 2024

50 மில்லியன் பார்வையாளர்களை நெருங்கும் ‘தி கோட்’ ட்ரெய்லர்! #TheGoat

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா மற்றும் பலர் நடிப்பில், யுவன் இசையமைப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள “தி கோட்” படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 17ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியானது. இந்த டிரைலர், வெளியான 24 மணி நேரத்தில் புதிய சாதனையைச் சாத்தியமாக்கியுள்ளது.

முந்தைய “லியோ” படத்தின் டிரைலர் சாதனைகளை முறியடித்து, தமிழ்ப் படங்களின் டிரைலர்களில் புதிய சாதனையைச் சாத்தியமாக்கியுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான டிரைலர்கள் மொத்தம் 39 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளன. 1.65 மில்லியன் லைக்குகள் கிடைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழ் டிரைலருக்கு மட்டும் 33 மில்லியன் பார்வைகள் கிடைத்துள்ளன. ஹிந்தி டிரைலர் 3.5 மில்லியன் பார்வைகள், தெலுங்கு டிரைலர் 2.5 மில்லியன் பார்வைகள் பெற்றுள்ளன.

முந்தைய தமிழ் டிரைலர்களில், 24 மணி நேரத்தில் “லியோ” 32.7 மில்லியன் பார்வைகள், “பீஸ்ட்” 29.7 மில்லியன் பார்வைகள், “துணிவு” 26 மில்லியன் பார்வைகள், “வாரிசு” 24 மில்லியன் பார்வைகள் பெற்றிருந்தது. “தி கோட்” படத்தின் டிரைலர், அதன் வெளியீடுக்கு முன்பு குறைவாகவே இருந்த ஹைப்பை, தற்போது அதிகரித்து விட்டது. மேலும், இந்த டிரைலர் 50 மில்லியனைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News