Thursday, October 3, 2024

5 பாடல்களுக்கு 5 இசையமைப்பாளர்கள்… பிண்ணனி இசையமைக்கும் ஜிப்ரான்… பல சர்ப்ரைஸ்களை வைத்துள்ள DNA திரைப்படம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அதர்வா நடிப்பில் உருவாகி உள்ள அடுத்த திரைப்படம் “டிஎன்ஏ” ஆகும். இதில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தை நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். இதற்கு முன்பு அவர் “ஒரு நாள் கூத்து,” “மான்ஸ்டர்,” மற்றும் “ஃபர்ஹான்” போன்ற படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“டிஎன்ஏ” திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியதிலிருந்து, ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தும் வகையில், படத்தில் இடம்பெறும் 5 பாடல்களுக்கு 5 இசையமைப்பாளர்கள் இசையமைக்கின்றனர்.

பல்வேறு உணர்வுகள், உற்சாகம் மற்றும் ரசிக்கத்தக்க பல தருணங்கள் இப்படத்தில் உள்ளன. இதனை மேம்படுத்தி ரசிகர்களுக்கு ஒரு சிறந்த காட்சி அனுபவமாக மாற்ற, இசையமைப்பாளர் ஜிப்ரானின் கவரும் பின்னணி இசையும் பொருத்தமாக அமைக்கப்பட்டுள்ளது என்று படத்தின் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News