Touring Talkies
100% Cinema

Saturday, June 21, 2025

Touring Talkies

‘3BHK’ படத்தின் இரண்டாவது பாடல் அப்டேட் வெளியீடு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சித்தார்த், ‘மிஸ் யூ’ திரைப்படத்திற்கு பிறகு ‘3 பிஎச்கே’ எனும் புதிய திரைப்படத்தில் நடித்துவிட்டார். இது அவருடைய 40-வது படம் ஆகும். ‘8 தோட்டாக்கள்’, ‘குருதி ஆட்டம்’ போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் சித்தார்துடன் மீதா ரகுநாத், சைத்ரா, சரத்குமார் மற்றும் தேவயானி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம், 3 பிஎச்கே வீடு வாங்கும் ஆசையுடன் வாழும் ஒரு குடும்பத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படம் வருகிற ஜூலை மாதம் 4-ம் தேதி வெளியாகவிருக்கிறது.இந்நிலையில், ‘3 பிஎச்கே’ படத்தின் இரண்டாவது பாடலான ‘இடி மழை’ நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News