Saturday, January 25, 2025

2K லவ் ஸ்டோரி பிரேமலு போல் இருக்கும்…. இயக்குனர் சுசீந்திரன் சொன்ன விஷயம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘2கே லவ்ஸ்டோரி’. இதில் புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடித்திருக்க, மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் வரும் பிப்ரவரி 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் விழாவில் இயக்குநர் சுசீந்திரன், “2கே லவ்ஸ்டோரி எனக்கு மிகவும் முக்கியமான படம். வெட்டிங்க் போட்டோகிராபி செய்கிற இளைஞர்கள் குழுவின் வாழ்க்கையில் நிகழும் சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கக் கூடிய வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

‘பிரேமலு’ படம் வெளியான அன்று யாருக்கும் தெரியவில்லை, ஆனால் அடுத்த அடுத்த ஷோக்களில் உலகமே அதை கவனித்தது. அதேபோல் இந்த படமும் பெரிய வெற்றி பெறும். ‘பிரேமலு’ மாதிரி பெரிய வசூல் சாதனை படைக்கும் படமாக இது இருக்கும்” என்றார்.

- Advertisement -

Read more

Local News