Tuesday, January 14, 2025

25 வருடங்கள் கழித்து இணையும் பாலிவுட் பிரபலங்களான‌அக்ஷய் குமார் மற்றும் தபு… வெளியான சுவாரஸ்யமான தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அக்ஷய் குமார். இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து 2.0 திரைப்படத்தில் நடித்தார். சமீபத்தில் அவரின் நடிப்பில் ‘ஓஎம்ஜி -2’, ‘சர்பிரா’, ‘கேல் கேல் மெய்ன்’ மற்றும் ‘சிங்கம் அகெய்ன்’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகி சுமாரான வரவேற்பையே பெற்றன.

அதேபோல், பிரபல பாலிவுட் இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கும் ‘பூத் பங்களா’ திரைப்படத்தில் அக்ஷய் குமார் கதாநாயகனாக நடிக்கிறார். இதற்கு முன்பு, இருவரும் கடைசியாக 2007ஆம் ஆண்டு வெளியான ‘பூல் பூலையா’ படத்தில் இணைந்து பணியாற்றினர். இந்தப் புதிய கூட்டணியின் மூலம் அக்ஷய் குமார், 16 ஆண்டுகள் கழித்து பிரியதர்ஷனுடன் மீண்டும் இணைந்துள்ளார்.

இந்தப் படத்தில் நடிகை தபு முக்கியமான கதாபாத்திரத்தில் இணைந்திருப்பது மேலும் ஒரு முக்கிய அம்சமாக உள்ளது. கடந்த 2000ஆம் ஆண்டு, பிரியதர்ஷன் இயக்கிய ‘ஹேரா பெரி’ படத்தில் தபு, அக்ஷய் குமாருடன் இணைந்து நடித்தார். இப்போது 25 ஆண்டுகள் கழித்து இவர்களுடன் தபு மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களிடையே பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த ‘பூத் பங்களா’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகவுள்ளது.

- Advertisement -

Read more

Local News