நடிகர் அருள்நிதி, இயக்குநரும் நடிகருமான அமீருடன் இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படம் ‘வேட்ட சாமி’. ஆடுகளம் நரேன், மதுசூதனன் ராவ், ஹரீஷ் பெரேடி, விஜி சந்திரசேகர், இந்துமதி மணிகண்டன், மைனா நந்தினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘பம்பர்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற எம்.செல்வகுமார் இப்படத்தை இயக்கியுள்ளார். சாமுவேல் மேத்யூ தனது ‘7 மைல்ஸ் பெர் செகண்ட்’ தயாரிப்பு நிறுவனம் மூலம் படத்தைத் தயாரித்துள்ளார். இந்நிறுவனம் ஏற்கெனவே சித்தார்த் நடிப்பில் ‘மிஸ் யூ’ திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. ‘வேட்ட சாமி’ படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. டிசம்பர் மாதம் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ள படக்குழு, தற்போது அதன் டீசரையும் வெளியிட்டுள்ளது.
