Advertisement

‘வாரணாசி’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறதா? வெளியான புது அப்டேட்!

மகேஷ் பாபு நடிப்பில் எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கி வரும் ‘வாரணாசி’ திரைப்படம் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் சுகுமாரன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றப்படலாம் எனக் கூறப்படுகிறது.

முதலில் 2027-ம் ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி உலகம் முழுவதும் படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கிராபிக்ஸ் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகளைத் தரமாக நிறைவு செய்வதற்காக வெளியீட்டை ஆகஸ்ட் மாதத்துக்கு மாற்றுவது குறித்து படக்குழு ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, ஜூலை 29, ஆகஸ்ட் 5 அல்லது ஆகஸ்ட் 12 ஆகிய தேதிகளில் ஏதேனும் ஒன்றில் படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், ரிலீஸ் தேதி மாற்றம் குறித்து படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

Add a Comment

Leave a Reply