Advertisement

ரஜினிகாந்த் பிறந்தநாளில் மீண்டும் திரைக்கு வரும் ‘அண்ணாமலை’!

1992-ம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘அண்ணாமலை’. தேவா இசையமைத்த இப்படம் திரையரங்குகளில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.

பால் வியாபாரியாக வாழும் அண்ணாமலை, நெருங்கிய நண்பனின் துரோகத்தால் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களையும், மீண்டும் உயர்ந்த நிலையை அடைவதற்காக மேற்கொள்ளும் போராட்டத்தையும் மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைந்திருந்தது. குஷ்பு, சரத்பாபு, மனோரமா, ஜனகராஜ், ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம், இன்றளவும் ரஜினியின் குறிப்பிடத்தக்க படங்களில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், ரஜினிகாந்தின் பிறந்தநாளான டிசம்பர் 12-ம் தேதி ‘அண்ணாமலை’ திரைப்படத்தை மறுவெளியீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 4K தொழில்நுட்பத்தில் படத்தின் காட்சிகள் தரம் மேம்படுத்தப்பட்டு வெளியாகவிருப்பதால், ரசிகர்களிடையே இப்படத்திற்கு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply