Advertisement

ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் ராபர்ட் பேட்டின்சன்…புதிய படத்தின் இயக்குநரும் அறிவிப்பு!

ஜேம்ஸ்பாண்ட் திரைப்பட வரிசையில் இதுவரை ஐந்து படங்களில் நடித்து உலகம் முழுவதும் பிரபலமானவர் நடிகர் டேனியல் கிரேக். இவர் கடைசியாக நடித்த 25-வது ஜேம்ஸ்பாண்ட் திரைப்படமான நோ டைம் டு டை, 2021ஆம் ஆண்டு வெளியானது. இதற்குப் பிறகு இனி ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதில்லை என்று டேனியல் கிரேக் அறிவித்தார். இதனால் அடுத்ததாக அந்தப் புகழ்பெற்ற கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவானது. புதிய நடிகரைத் தேர்வு செய்வதற்கான தேடலும் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், அடுத்த ஜேம்ஸ்பாண்டாக பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் பேட்டின்சன் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து புதிய ஜேம்ஸ்பாண்ட் தோற்றத்தில் ராபர்ட் பேட்டின்சன் இருக்கும் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே தி பேட்மேன் திரைப்படத்தில் நடித்துள்ள ராபர்ட் பேட்டின்சன், கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய தி ஒடிசி படத்திலும் இடம்பெற்றுள்ளார். மேலும், 2028ஆம் ஆண்டு வெளியாகவுள்ள தி பேட்மேன் இரண்டாம் பாகத்திலும் அவர் நடித்து வருகிறார். இதற்கிடையே, புதிய ஜேம்ஸ்பாண்ட் திரைப்படத்தை இயக்குநர் டெனிஸ் வில்லெனும் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply