Advertisement

வேற்றுலக உயிரினங்களுடன் மோதும் அக்‌ஷய் குமார்… ‘சாமுக்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகி வரும் அறிவியல் புனைகதை திரைப்படமான ‘சாமுக்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் 2027-ம் ஆண்டு மே 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

கனிஷ்க் வர்மா இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடித்துள்ள இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை, அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மோஷன் போஸ்டரைப் பகிர்ந்து அறிவித்துள்ளார். அதில், அச்சுறுத்தும் தோற்றத்துடன் வேற்றுலக உயிரினம் இடம்பெற்றுள்ளது. காட்டுப் பகுதியில் துப்பாக்கியுடன் எதிரிகளை எதிர்கொள்ளத் தயாராக நிற்கும் அக்‌ஷய் குமாரும் அந்தப் போஸ்டரில் காட்சியளிக்கிறார்.

இதனுடன் அவர் வெளியிட்ட பதிவில், “எதிரி மனிதன் இல்லை. ஆனால் இந்தப் போராட்டம் மனித குலத்துக்கானது. பின்வாங்குவதற்கு வாய்ப்பில்லை. உங்கள் அருகிலுள்ள திரையரங்குகளில் ‘சாமுக்’ 2027 மே 28-ம் தேதி படையெடுக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Add a Comment

Leave a Reply