‘டாக்சிக்’ கன்னடப் படத்தில் யஷ் உடன் நெருக்கமான காட்சிகளில் நடித்தது தொடர்பாக எழுந்த விமர்சனங்களுக்கு நடிகை கியாரா அத்வானி பதிலளித்துள்ளார். ‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் தனது கணவரும் நடிகருமான சித்தார்த் மல்ஹோத்ராவுடன் பங்கேற்றபோது இதுகுறித்து அவர் பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், “ஒரு நடிகர் பல பெண்களுடன் காதல் காட்சிகளில் நடித்தால் யாரும் அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஆனால், ஒரு நடிகை அப்படிப்பட்ட காட்சிகளில் நடித்தால், அவர் திருமணமானவர் இல்லையா, இதைப் பற்றி அவரது கணவர் சித்தார்த் என்ன நினைப்பார் எனக் கேள்வி எழுப்புகிறார்கள். இது பாலினப் பாகுபாடும் இரட்டை நிலைப்பாடும் இல்லையா?
ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல திறமையான நடிகைகள் பல ஆண்டுகளாக இதுபோன்ற விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றனர். ஆனால், எனது கணவர் இதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. இதுகுறித்து நாங்கள் இருவரும் பேசியதுகூட இல்லை” என்றார்.
