தமிழில் புதிய படத்தை இயக்குகிறாரா தெலுங்கு இயக்குநர் தருண் பாஸ்கர்?

தமிழ் சினிமாவில் விஜய், தனுஷ், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களை இயக்கும் வாய்ப்பைப் பெறும் தெலுங்கு இயக்குநர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் மூலம் தெலுங்குத் திரையுலகைச் சேர்ந்த இயக்குநர்கள் தமிழிலும் தங்களது படைப்புகளை உருவாக்கி வருகின்றனர்.

அந்த வரிசையில் இயக்குநர் தருண் பாஸ்கரும் இணையவுள்ளார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘பெல்லி சூப்புலு’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் இவர். இயக்குநராக மட்டுமின்றி, சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தருண் பாஸ்கர் அடுத்ததாகத் தமிழில் ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்று இப்படத்தைத் தயாரிக்க முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. படத்தின் பெயர் மற்றும் இதர விவரங்களுடன் கூடிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply