ஹாலிவுட் படங்களைவிட ‘ராமாயணா’ சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது – சன்னி தியோல் பாராட்டு!

நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ராமாயணா’. இந்திய இதிகாசமான ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு மிகப்பெரிய பொருட்செலவில் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ராமர் வேடத்தில் ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும் நடித்துள்ளனர். ராவணன் கதாபாத்திரத்தை யாஷும், அனுமன் கதாபாத்திரத்தை சன்னி தியோலும் ஏற்றுள்ளனர். ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இருவரும் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர். பல்லாயிரம் கோடி செலவில் உருவான ‘ராமாயணா’ திரைப்படம் கடந்த 5ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

திரையரங்குகளில் வெளியான நான்கு நாட்களிலேயே இப்படம் உலகளவில் ரூ.500 கோடி வசூலைக் கடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. உலகம் முழுவதும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் இப்படத்தில் அனுமனாக நடித்துள்ள பாலிவுட் நடிகர் சன்னி தியோல், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில், ‘ராமாயணா’ திரைப்படம் ஹாலிவுட் படங்களுக்கு எந்த வகையிலும் சளைத்ததல்ல என்றும், அவற்றைவிடச் சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் சன்னி தியோல் தெரிவித்துள்ளார். மேலும், படத்தின் விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் பார்வையாளர்களைத் திரைப்படத்தின் உலகத்திற்குள் அழைத்துச் செல்லும் அளவுக்கு இயல்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு இந்தியரும் திரையரங்கிற்குச் சென்று இப்படத்தைப் பார்க்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதேக ஒட்டுமொத்த தொழில்நுட்பக் குழுவினரின் அர்ப்பணிப்பையும் அவர் பாராட்டியுள்ளார்.

Add a Comment

Leave a Reply