சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தின் புதிய கிளிம்ப்ஸ் வீடியோவை தீபாவளியை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் சிம்புவின் கதாபாத்திரம் ‘தாஸ்’ என அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அனிருத் இசையில் உருவான ‘பயர்’ என்ற கானா பாடலும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
வெற்றிமாறன் இயக்கும் இப்படம் வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் கதைக்களத்துடன் உருவாகி வருகிறது. கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆண்ட்ரியா, பிரியங்கா மோகன், யோகி பாபு, சமுத்திரக்கனி, விக்ராந்த், கிஷோர், அமீர் உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர்.
சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், படத்தை பொங்கல் பண்டிகைக்கு வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, ‘அரசன் வேர்ல்டு’ கிளிம்ப்ஸ் வீடியோவும் விரைவில் வெளியாகும் என தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.
