இன்றைய கதாநாயகிகளிடம் நடிப்பின் மீது அர்ப்பணிப்பு இல்லை – இனியா!

தான் நடித்த அனைத்துப் படங்களுக்கும் விருதுகள் கிடைக்க வேண்டும் என்று விரும்பியதாக நடிகை இனியா தெரிவித்துள்ளார். ஒரு காட்சியை எவ்வளவு அழகியலுடன் படமாக்குகிறோம், அதை எப்படித் திரையில் வெளிப்படுத்துகிறோம் என்பதில்தான் அதன் தனித்துவம் இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், இன்றைய கதாநாயகிகளில் பலருக்கு நடிப்பின் மீது போதிய அர்ப்பணிப்பு இல்லை என்றும், புகழும் பணமும் மட்டுமே முக்கியமாக இருப்பதாகத் தோன்றுவதாகவும் தெரிவித்துள்ளார். சில படங்களில் நடித்து, பணமும் புகழும் சம்பாதித்து நட்சத்திர அந்தஸ்தை அடைந்த பிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கிவிடுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Add a Comment

Leave a Reply