ரசிகர்களைச் சந்தித்த அமிதாப் பச்சன்… அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்!

மும்பை ஜூஹு பகுதியில் உள்ள தனது வீட்டின் முன்பு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அமிதாப் பச்சன் ரசிகர்களைச் சந்திப்பது வழக்கம். பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் இந்த வழக்கத்தின்படி, நேற்றும் ரசிகர்களைச் சந்தித்தார். இம்முறை அவரது பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டிருந்தன. ரசிகர்களைச் சந்திக்க அவர் நின்றிருந்த மேடையின் மூன்று பக்கங்களிலும் குண்டு துளைக்காத கண்ணாடித் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன.

Add a Comment

Leave a Reply