பிரபல பாலிவுட் இயக்குநர் சஞ்சய் குப்தா காலமானார்!

1994-ம் ஆண்டு வெளியான ‘ஆதிஷ்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சஞ்சய் குப்தா. தொடர்ந்து பல படங்களை இயக்கி பாலிவுட்டில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தார். குறிப்பாக, அமிதாப் பச்சன், சஞ்சய் தத், சுனில் ஷெட்டி உள்ளிட்டோர் நடித்த ‘காண்டே’ திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தைத் தேடித்தந்தது.இதையடுத்து ‘முசாபிர்’, ‘ஜிந்தா’, ‘ஷூட்அவுட் அட் லோகண்ட்வாலா’, ‘ஷூட்அவுட் அட் வாடாலா’ உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில், அக்டோபர் 30-ம் தேதி தனது வீட்டின் சமையலறையில் தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Add a Comment

Leave a Reply