பிரபல ஹாலிவுட் நடிகர் சர் பேட்ரிக் ஸ்டீவர்ட் தனது 86-வது வயதில் காலமானார். ‘எக்ஸ்-மென்’ திரைப்படத் தொடரில் பேராசிரியர் சார்லஸ் சேவியர் கதாபாத்திரத்திலும், ‘ஸ்டார் ட்ரெக்: தி நெக்ஸ்ட் ஜெனரேஷன்’ தொடரில் கேப்டன் ஜீன்-லூக் பிக்கார்ட் கதாபாத்திரத்திலும் நடித்து உலகம் முழுவதும் புகழ்பெற்றவர். தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த இவர், மேடை நாடகங்கள் மற்றும் திரைப்படங்கள் என ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக கலைத்துறையில் பயணித்துள்ளார். இவரது நடிப்புத் திறமைக்காக எம்மி, கோல்டன் குளோப், கிராமி உள்ளிட்ட பல்வேறு விருதுகளும் பாராட்டுகளும் கிடைத்துள்ளன. இவரது மறைவுக்குத் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Add a Comment
