‘ஜெயிலர் 2’ படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக நடித்துள்ள மலையாள நடிகை மிர்ணாவுக்கு, முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகத்தில் காட்சிகள் குறைவாக இருந்தாலும், சில உணர்வுபூர்வமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. படம் வெளியானதைத் தொடர்ந்து ரஜினிகாந்துடன் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்த அவர், தனது பதிவுகள் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார்.
தற்போது இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்த ஹிந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள மிர்ணா, அவருடனான அனுபவத்தை நெகிழ்ச்சியுடன் விவரித்துள்ளார்.
தனது சிறுவயது க்ரஷ் என்றும், எப்போதும் வியந்து பார்த்த நடிகர் என்றும் ஹிருத்திக் ரோஷனைப் குறிப்பிட்டுள்ள அவர், அவருடன் ஒரே திரையில் தோன்றியது கனவு நனவானது போன்ற உணர்வைத் தந்ததாகத் தெரிவித்துள்ளார். மேலும், சூப்பர் ஸ்டாருக்குப் பின்னால் இருக்கும் மனிதரை நேரில் அறிந்துகொண்டது இந்த அனுபவத்தை மேலும் சிறப்பாக்கியதாகவும், ஹிருத்திக் மிகவும் அன்பானவர், எளிமையானவர் எனவும் பாராட்டியுள்ளார். அவர்மீதான தனது மரியாதையும் அபிமானமும் அதிகரித்துள்ளதாகவும் மிர்ணா குறிப்பிட்டுள்ளார்.
