“எனக்கு விஜய் சார்தான் லக்கி சார்ம்” – நடிகை சமந்தா புகழாரம்!

நடிகை சமந்தா, கடந்த 2025-ம் ஆண்டு பாலிவுட் இயக்குநர் ராஜ் நிடிமோருவைத் திருமணம் செய்துகொண்டார். தற்போது கர்ப்பமாக இருக்கும் அவர், குழந்தை பிறக்கும் வரை சினிமாவில் இருந்து ஓய்வெடுக்கவும், அதன் பிறகு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, சில நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்று வருகிறார்.

அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சமந்தா, “என்னுடைய ஒரே லக்கி சார்ம் விஜய் சார்தான்” என்று தெரிவித்துள்ளார். தனக்குப் பிடித்த ஹீரோ விஜய் என்றும், அவருடன் இணைந்து நடித்த மூன்று படங்களும் வெற்றி பெற்றதாகவும் கூறியுள்ளார். மேலும், கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு உத்வேகமாக இருக்கும் விஜய், தலைவராக வேண்டும் என முடிவெடுத்து, ஆட்சிப் பொறுப்பைத் தேர்ந்தெடுத்து, அமைதியாகவும் கவனமாகவும் செயல்பட்டு, திரைக்குப் பின்னால் கடுமையாக உழைத்து சரியான தருணத்திற்காகக் காத்திருந்ததாகப் பாராட்டியுள்ளார்.

இதற்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியிலும் விஜய்யின் எளிமை, படப்பிடிப்புத் தளத்தில் அவர் காட்டும் அர்ப்பணிப்பு, சக நடிகர்களிடம் பழகும் விதம் ஆகியவை தன்னை மிகவும் கவர்ந்ததாகவும், அதனால்தான் விஜய் தனக்குப் பிடித்த ஹீரோ என்றும் சமந்தா தெரிவித்திருந்தார்.

‌

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading