“குடும்பத்தினரைத் தவிர மற்றவர்களால் உங்கள் வயதைக் கணிக்க முடியாதபடி இருங்கள்” – கஜோல்

90-களில் பாலிவுட்டின் கனவுக் கன்னியாக ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகை கஜோல். தமிழில் மின்சார கனவு, வேலையில்லா பட்டதாரி 2 உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது 51 வயதாகும் கஜோல், தனது தோற்றம் மற்றும் வயது குறித்து சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கருத்துகள் கவனத்தைப் பெற்றுள்ளன.

திரையுலகில் நடிகைகளைப் பொறுத்தவரை, நடிப்புத் திறமைக்கு அப்பால் வயது தொடர்பான விமர்சனங்களையும் எதிர்கொள்ள வேண்டிய சூழல் இருப்பதாகப் பலரும் கருதுகின்றனர். குறிப்பாக, வயது அதிகரிப்பது தோற்றத்தில் வெளிப்படக் கூடாது என்ற அழுத்தம் நடிகைகளுக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. திறமை இருந்தாலும் வயதை அடிப்படையாகக் கொண்டு விமர்சிப்பவர்கள் இருப்பதால், இது அவர்களுக்குச் சவாலாக அமைகிறது.

இந்தச் சூழலில் நடிகைகள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய கஜோல், “எந்தச் சூழலிலும் நடிகைகள் சோர்வடையக் கூடாது. உங்கள் குடும்பத்தினரைத் தவிர வேறு யாராலும் உங்கள் வயதைக் கணிக்க முடியாத வகையில் இருங்கள். அது உங்களுக்குள் இருக்கும் தன்னம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading