விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள ‘ரணபாலி’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில், ராஷ்மிகா நடிப்பில் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட ‘மைசா’ படத்தின் வெளியீட்டுத் திட்டத்தில் மாற்றம் ஏற்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, இப்படத்தை நவம்பர் 27-ம் தேதி வெளியிடப் படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், ‘ரணபாலி’ மற்றும் ‘மைசா’ ஆகிய இரு படங்களின் வெளியீட்டுக்கும் இடையே போதிய இடைவெளி இருக்காது என ராஷ்மிகா மந்தனா மற்றும் தயாரிப்பாளர்கள் கருதுவதாகத் தெரிகிறது. இதனால், ‘மைசா’ திரைப்படத்தை 2027 ஜனவரி மாத இறுதியில் வெளியிடுவது குறித்து தயாரிப்புக் குழு ஆலோசித்து வருவதாகத் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராஷ்மிகா கதையின் மையக் கதாபாத்திரத்தில் நடித்த ‘தி கேர்ள்பிரண்ட்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து, அவர் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் இரண்டாவது பெண் மையப் படமாக ‘மைசா’ உருவாகிறது. அறிமுக இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கும் இப்படத்தில், ராஷ்மிகா கோண்ட் பழங்குடியினப் பெண்ணாக நடித்துள்ளார். மேலும், தனது திரைப்பயணத்தில் முதல் முறையாக இப்படத்தில் அதிரடி ஆக்ஷன் கதாபாத்திரத்திலும் அவர் தோன்றுகிறார்.
