‘எல்லம்மா’ ரிலீஸ் எப்போது? வெளியான புதிய அப்டேட்!

தசரா பண்டிகையை முன்னிட்டு, தேவி ஸ்ரீ பிரசாத் கதாநாயகனாக நடிக்கும் ‘எல்லம்மா’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, இப்படம் 2027 மார்ச் 5-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

‘பலேகம்’ திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் வேணு யெல்தண்டி இப்படத்தை இயக்கி வருகிறார். தற்போது படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இசையமைப்பாளராகப் புகழ்பெற்ற தேவி ஸ்ரீ பிரசாத், இப்படத்தின் மூலம் கதாநாயகனாகவும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தில்ராஜு வழங்க, சிரிஷ் தயாரிப்பில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் ‘எல்லம்மா’ உருவாகிறது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் பான் இந்தியத் திரைப்படமாக வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading