‘புஷ்பா’, ‘புஷ்பா 2’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய சுகுமார், மீண்டும் ராம்சரணுடன் இணைந்து புதிய படத்தை உருவாக்கத் தயாராகி வருகிறார். ‘ரங்கஸ்தலம்’ படத்துக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
தற்போதைய தகவலின்படி, இப்படத்தின் திரைக்கதை இறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அடுத்த மாதம் படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகவுள்ள இப்படத்திற்கு இசையமைக்க அனிருத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
சுகுமார் தொடர்ந்து தேவி ஸ்ரீ பிரசாத்துடன் பணியாற்றி வந்த நிலையில், இப்படத்திற்கு அனிருத் இசையமைத்தால் அது புதிய கூட்டணியாக அமையும். மேலும், ராம்சரண் நடிக்கும் படத்திற்கு அனிருத் இசையமைப்பது இதுவே முதல்முறையாக இருக்கும்.
