ஆர்யாவின் ‘ஹலோ காதல்’… வெளியான டைட்டில் டீஸர்!

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வேட்டுவம்’ படத்தில் நடித்துள்ள ஆர்யா, அடுத்ததாக ‘சர்பட்டா பரம்பரை 2’ படத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையே, அவரது 40-வது படத்தை இயக்குநர் நிகில் முரளி இயக்கியுள்ளார். இதில் நிகிலா விமல், வைஷ்ணவி சைதன்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படத்திற்கு ‘ஹலோ காதல்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்திற்கான வசனங்களை இயக்குநர் ஹலீதா ஷமீம் எழுதியுள்ளார். வரும் டிசம்பர் மாதம் திரைப்படம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ள நிலையில், டைட்டில் டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading