ஏ.ஐ. மூலம் பெண்களை தவறாக சித்தரிப்பவர்களுக்கு கடும் தண்டனை வேண்டும் -நடிகை குஷ்பு!

சென்னையில் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் தலைவர் குஷ்பு தலைமையில் நடைபெற்றது. இதில் குட்டி பத்மினி, ஒய்.ஜி. மகேந்திரன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத் தலைவர் மங்கை அரிராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்துக்குப் பிறகு பேசிய குஷ்பு, சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு நிதி திரட்டும் நோக்கில் 2027 ஏப்ரல் மாதம் மலேசியாவில் கலை நிகழ்ச்சி நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், அதில் நடிகர் சிம்பு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தயாரிப்பாளர்கள் சார்பில் அரசிடம் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

ஏ.ஐ. தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தி பெண்களை ஆபாசமாகச் சித்தரிப்பது கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டிய செயல் எனத் தெரிவித்த அவர், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோருக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading