‘சீடன்’, ‘கருடன்’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள மலையாள நடிகர் உன்னி முகுந்தன், ‘மார்கோ’ படத்தின் மூலம் பான் இந்தியா அளவில் கவனம் பெற்றார். தற்போது தனது 50வது திரைப்படத்தில் நடிப்பதுடன், இயக்குநராகவும் புதிய பொறுப்பை ஏற்கிறார்.
இந்தப் படத்தை பனோரமா ஸ்டூடியோஸ் மற்றும் உன்னி முகுந்தன் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. தனது 50வது படம் என்பதால் இது தனக்கு மிகவும் முக்கியமானது என்று தெரிவித்துள்ள உன்னி முகுந்தன், இப்படத்தை எழுதுவதும் இயக்குவதும் கூடுதல் பொறுப்பை அளித்துள்ளதாக கூறியுள்ளார்.
சொந்த கதைகளை ரசிகர்களிடம் சொல்ல வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக இருந்ததாகவும், அதற்கு சரியான கதையும் தருணமும் தற்போது அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பல்வேறு மொழி ரசிகர்களையும் சென்றடையும் வகையில் இந்தப் படம் உருவாகும் என்றும் உன்னி முகுந்தன் கூறியுள்ளார்.
