‘ராக்கா’வில் அடுத்து என்ன? ‘37’ போஸ்டரால் அதிகரித்த எதிர்பார்ப்பு!

அல்லு அர்ஜூன் – அட்லி இணையும் ‘ராக்கா’ படத்தின் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஏப்ரலில் வெளியானது. ஆனால், அதன்பிறகு படத்தின் உலகத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் கிளிம்ப்ஸ் வெளியாகாததால், அந்த வீடியோவுக்கான எதிர்பார்ப்பு தொடர்ந்து இருந்து வருகிறது.

ஆகஸ்ட்டில் இப்படியொரு வீடியோ வெளியாகும் என்றும், அதன் மூலம் படத்தின் கதைக்களம் அமைந்திருக்கும் உலகம் பற்றிய ஒரு பார்வை கிடைக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன. அந்த அறிவிப்பு எதிர்பார்த்தபடி வராத நிலையில், தற்போது படக்குழு வெளியிட்டுள்ள புதிய போஸ்டர் கவனம் பெற்றுள்ளது. அதில் ‘37’ என்ற எண்ணுடன் மிகப்பெரிய அறிவிப்பு வரவிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அடுத்ததாக வெளியாக இருப்பது முக்கிய அப்டேட்டா அல்லது ரசிகர்கள் எதிர்பார்க்கும் கிளிம்ப்ஸ் வீடியோவா என்ற கேள்வி எழுந்துள்ளது.

‘புஷ்பா 2’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜூனின் அடுத்த படமாக ‘ராக்கா’ உருவாகி வருவதால், இப்படம் தொடங்கிய நாள் முதலே எதிர்பார்ப்பில் உள்ளது. அதற்கேற்ப படத்தின் தகவல்கள் வெளியில் கசியாமல் படக்குழு அதிக கவனம் செலுத்தி வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading