தனது புதிய முயற்சியாக ‘ஒன் மேன்’ திரைப்படத்தை உருவாக்கிய சங்ககிரி ராஜ்குமார், நடிப்பு மட்டுமின்றி திரைக்கதை, இயக்கம் உள்ளிட்ட படைப்பின் பல்வேறு பணிகளையும் ஒருவராகவே மேற்கொண்டுள்ளார். வித்தியாசமான முயற்சியாக உருவான இப்படம் கடந்த 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. உலக சினிமா வரலாற்றில் தனி மனிதராக ஒரு முழு திரைப்படத்தை உருவாக்கிய முயற்சியாக கவனம் பெற்றாலும், எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை. இந்நிலையில், சங்ககிரி ராஜ்குமாரின் முயற்சியை அறிந்த நடிகர் சிலம்பரசன், அவரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். பரபரப்பான படப்பிடிப்புக்கு மத்தியிலும் அவரது முயற்சியை கவனித்து, நேரில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
Add a Comment
