பாலிவுட் நடிகர் அனுபம் கெர் திரையுலகில் 42 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறார். பாலிவுட் மட்டுமின்றி தென்னிந்திய மொழி படங்களிலும் குணச்சித்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இதுவரை இரண்டு படங்களை இயக்கியுள்ள இவர், ஐந்து படங்களையும் தயாரித்துள்ளார்.தற்போது தனது 42வது ஆண்டு திரைப்பயணத்தில் இருக்கும் அனுபம் கெர், தான் நடிக்கவிருக்கும் 555வது படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆனால் படத்தின் தலைப்பு, நடிகர்கள் மற்றும் இயக்குநர் உள்ளிட்ட எந்த தகவலையும் அவர் வெளியிடவில்லை. இவை அனைத்தும் சில காலம் சஸ்பென்ஸாக இருக்கட்டும் என தெரிவித்துள்ளார்.
Add a Comment
