30 கோடி பார்வைகளை கடந்த ‘முட்ட கலக்கி’!

கென் இயக்கி நடித்த ‘யூத்’ திரைப்படம் கடந்த மார்ச் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் அனிஷ்மா, சுராஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்த இப்படத்தின் ‘முட்ட கலக்கி’ பாடல் வெளியானது முதலே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று ஹிட் ஆனது. இந்நிலையில், கென் எழுதி பாடிய இப்பாடல் யூடியூபில் 300 மில்லியன் பார்வைகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இந்தாண்டு வெளியான தமிழ் பாடல்களில் அதிக கவனம் பெற்ற பாடல்களில் ஒன்றாக ‘முட்ட கலக்கி’ மாறியுள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading