உலக சாதனை படைத்த இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் ‘ஒன்மேன்’ படம் குறித்து உருக்கமான பதிவு!

இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில் உருவான ‘ஒன்மேன்’ திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, இசை உள்ளிட்ட மொத்தம் 74 துறைகளை ஒரே நபராக கையாண்டு உருவாக்கப்பட்ட இந்த முயற்சி தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய மற்றும் உலக சினிமா அளவிலும் அரிதான சாதனையாக பேசப்பட்டது.

படத்திற்கு விமர்சகர்கள் மற்றும் ஊடகங்கள் மத்தியில் பாராட்டுகள் கிடைத்தாலும், எதிர்பார்த்த அளவுக்கு திரையரங்குகளில் வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் படத்தின் இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார், சென்னையில் இருந்து தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளதாக உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், இரவு பகல் பாராமல் கடன் வாங்கி இந்தப் படத்திற்காக உழைத்ததாகவும், ஆனால் எந்த பலனும் கிடைக்காமல் தற்போது கடனாளியாக ஊருக்குத் திரும்பியுள்ளதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார். சிறிய முயற்சிகளுக்குக்கூட வெளிநாடுகளில் கிடைக்கும் ஆதரவு, இந்தியாவில் தனித்துவமான திரைப்பட முயற்சிகளுக்கு கிடைப்பதில்லை என்றும் அவர் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

திரையரங்குகளில் போதிய வாய்ப்பு கிடைக்காத நிலையில், ஓடிடி வெளியீட்டிற்காகவும் பல முயற்சிகளை மேற்கொண்டதாக அவர் கூறியுள்ளார். ஆனால் நடிகர்கள் யார், தயாரிப்பு நிறுவனம் எது, திரையரங்க வசூல் எப்படி என்ற கேள்விகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.இதனால் வரும் வியாழக்கிழமை ‘ஒன்மேன்’ திரைப்படத்தை யூடியூபில் வெளியிட முடிவு செய்துள்ளதாக சங்ககிரி ராஜ்குமார் கூறியுள்ளார். இருப்பினும் சினிமாவை விட்டு விலகப்போவதில்லை என்றும், சிறிது ஓய்வுக்குப் பிறகு ஒரு வெற்றிகரமான கமர்ஷியல் திரைப்படத்தை இயக்குவேன் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading